ஜியோஹாட்ஸ்டாரில் புதிய வெப் தொடர்: 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் - ஆஃப்டர் டார்க்' நவம்பர் 13 முதல் ஸ்ட்ரீமிங்
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மாதிக் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்: ஆஃப்டர் டார்க்'. இத்தொடர் வரும் நவம்பர் 13 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளமை ததும்பும் கல்லூரி வாழ்க்கை, மாணவர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் மற்றும் விறுவிறுப்பான புதிரான மர்மங்களை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஷனாயா கபூர், மான்யா குரோவர், திவிக் சர்மா, ஆதி மாலிக் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ரீமா மாயா இந்த தொடரை இயக்கியுள்ளார். கல்லூரி பின்னணியில் புதிய திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நவம்பர் 13 அன்று அனைத்து எபிசோடுகளும் ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
· Jiohotstar