ஷனாயா கபூர் நடிக்கும் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் ஆஃப்டர் டார்க்: நவம்பர் 13 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்: ஆஃப்டர் டார்க் வெப் சீரிஸ், வரும் நவம்பர் 13 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரீமா மாயா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் ஷனாயா கபூர், மான்யா குரோவர், திவிக் சர்மா, ஆதி மாலிக் மற்றும் அபினவ் சிங் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒரு ஆடம்பரக் கல்லூரி வளாகத்தில் உண்மையை வெளிக்கொணரும் தேடலில் ஒவ்வொருவரும் சந்தேகத்திற்குரியவர்களாக மாறும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இதன் கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு வெளியான திரைப்படத் தொடர்களைப் போல வெறும் காதல் மற்றும் நடனம் மட்டுமின்றி, ஆழமான மர்மங்கள் மற்றும் விறுவிறுப்பான விசாரணைக் காட்சிகளுடன் இத்தொடர் அமைந்திருப்பதால் இளசுகள் மத்தியில் இதன் மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
· Jiohotstar