சுதீர் பாபுவின் 20வது படத்திற்கான நடிகர் தேர்வு: தயாரிப்பு நிறுவனம் அதிரடி அழைப்பு!
நடிகர் சுதீர் பாபு தனது சொந்த பட நிறுவனமான சுதீர் பாபு புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ள தனது 20வது படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைத்து வயது வரம்பினரும் பங்கேற்கக்கூடிய இந்த திறந்தநிலை வாய்ப்பு குறித்து வம்சி சேகர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சுதீர் பாபுவின் 20வது திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. திரைப்படங்களில் நடிக்க ஆர்வமும் திறமையும் கொண்ட புதுமுகங்களை வரவேற்கும் வகையில் இந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிப்பில் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்பும் கலைஞர்கள் படக்குழுவின் வழிகாட்டுதல்படி தங்களது சுயவிவரங்களை அனுப்பி இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
· Ursvamsishekar