‘மந்தாடி’ சுஹாஸ் மற்றும் சஞ்சனா இணையும் ‘ஹைட் அண்ட் சில்க்’: அம்ரித் ராம்நாத் இசையில் புது ரொமான்டிக் காம்போ!

‘மந்தாடி’ சுஹாஸ் மற்றும் சஞ்சனா இணையும் ‘ஹைட் அண்ட் சில்க்’: அம்ரித் ராம்நாத் இசையில் புது ரொமான்டிக் காம்போ!

‘மந்தாடி’ திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்ற சுஹாஸ் மற்றும் சஞ்சனா கதாநாயகியாக இணைந்து நடிக்கும் புதிய ரொமான்டிக் திரைப்படம் ‘ஹைட் அண்ட் சில்க்’. இப்புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்லி கோலிவுட் தளம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்படத்தை ராஜேந்திர பாலா இயக்க, கார்த்திகேயன் மற்றும் வர்திகா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், மலையாளத்தில் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் மெல்லிசைப் பாடல்களால் ரசிகர்களின் மனதை வென்ற இளம் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவருடைய இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலும் உணர்வுகளும் நிறைந்த ஒரு அழகான கதையம்சத்தோடு தயாராகி வரும் ‘ஹைட் அண்ட் சில்க்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்புதிய கூட்டணியின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்