சூரி உடன் மோதும் சுஹாஸ்: மாண்டாடி படத்தில் மிரட்டலான தமிழ் அறிமுகம்!
சூரி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் மாண்டாடி திரைப்படத்தில், வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார் சுஹாஸ். தெலுங்கு சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற சுஹாஸ், இப்படத்தின் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினிமா வட்டாரத்தில் சுவாரசியமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. திரைப்படத்தில் சம்மட்டி வகையறா மற்றும் சாட்டப்புலி இடையிலான மோதல் காட்சிகளில், சுஹாஸின் மிரட்டலான வில்லத்தனம் சூரியின் கதாபாத்திரத்திற்கு இணையான பலத்தை சேர்த்துள்ளது. இருவருக்கும் இடையிலான அனல் பறக்கும் மோதல் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளி வருகின்றன. சுஹாஸின் தனித்துவமான உடல்மொழியும் கூர்மையான பார்வையும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தற்போது மாண்டாடி திரைப்படம் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை குவித்து வரும் இப்படம், சூரியின் திரையுலக பயணத்தில் மற்றொரு வெற்றிப் படமாக அமைந்துள்ள நிலையில், சுஹாஸுக்கும் தமிழில் அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Only Kollywood