திரையரங்குகளில் கொண்டாட்டத்தை எகிற வைக்கும் வேரமாரி ஜெயிலர் 2 ரேவ்: அசத்தல் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் அனிருத் இசையமைத்த ரேவ் டிராக் கொண்டாட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரங்கமே அதிரும் வகையில் வேறமாரி வைபில் ரசிகர்கள் துள்ளிக்குதிக்கும் இந்த வீடியோ பதிவு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு என நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 அன்று உலகளவில் திரைக்கு வரவுள்ளது. தலைவரின் கம்பீரமான ஆக்ஷனுடன் அனிருத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசை இணையவிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Sun Pictures