தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் சி: ரசிகர்கள் நெகிழ்ச்சிப் பாராட்டு

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் சி: ரசிகர்கள் நெகிழ்ச்சிப் பாராட்டு

தமிழ் திரையுலகில் தன் தனித்துவமான நகைச்சுவை மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் மக்களின் மனம் கவர்ந்த இயக்குநர் சுந்தர் சி, திரையுலகில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு மூவி தமிழ் உள்ளிட்ட சினிமா பக்கங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன. முறை மாமன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், கலகலப்பு, அரண்மனை தொடர் என எண்ணற்ற மறக்க முடியாத வெற்றிப் படங்களை வழங்கியவர் சுந்தர் சி. நகைச்சுவை உணர்வு குன்றாமல் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்து வரும் அவரது சாதனை திரைத்துறையினரால் போற்றப்படுகிறது. தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தருணத்தில் வெளியாகும் அவரது புதிய படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

· @_movietamil

பழைய செய்திகள்