மூக்குத்தி அம்மன் 2 கிராபிக்ஸ் சர்ச்சை: விமர்சகர்களுக்கு இயக்குனர் சுந்தர் சி காரசாரமான பதில்

மூக்குத்தி அம்மன் 2 கிராபிக்ஸ் சர்ச்சை: விமர்சகர்களுக்கு இயக்குனர் சுந்தர் சி காரசாரமான பதில்

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் சுந்தர் சி விரிவான விளக்கம் அளித்துள்ளார். படம் முழுக்க ஏஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்காக 400 முதல் 500 தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடந்த ஓராண்டாக இரவு பகலாக உழைத்துள்ளதாக சுந்தர் சி கூறியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள 3000-க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளில் வெறும் 15 காட்சிகளில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பம் சிறிதளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள அனைத்து காட்சிகளையும் உள்ளூர் கலைஞர்களே உருவாக்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போகாமல், நம்ம ஊர் திறமையாளர்களை நம்பி இந்த விஎஃப்எக்ஸ் பணிகளை ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார். உள்ளூர் கலைஞர்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் யூடியூப் சேனல்கள் அவசரமாகக் குறை கூறுவது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுந்தர் சியின் இந்த உருக்கமான மற்றும் நேரடியான பேச்சு தற்போது திரையுலக வட்டாரத்திலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்