மூக்குத்தி அம்மன் 2 முழுக்க முழுக்க ஃபேண்டஸி படம்: சுந்தர் சி பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்

மூக்குத்தி அம்மன் 2 முழுக்க முழுக்க ஃபேண்டஸி படம்: சுந்தர் சி பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் பின்னணி குறித்து இயக்குநர் சுந்தர் சி பகிர்ந்துள்ள சுவாரசியமான நேர்காணல் வீடியோவை மூவி தமிழ் தளம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதையளவில் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என்பதை சுந்தர் சி தெளிவாக விளக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடுத்தரக் குடும்பத்தின் நிஜ வாழ்க்கைச் சூழலில் அம்மன் தோன்றுவது போன்று கதை நகர்ந்தது. ஆனால், இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்ட கற்பனை உலகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ள சுந்தர் சி, இதில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்கள் இணையும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கி இருப்பதாகவும், அதற்காக படக்குழுவினர் தீவிர உழைப்பைச் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுந்தர் சியின் இந்த புதிய விளக்கம் நயன்தாராவின் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுடன் தயாராகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தகவல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்