அம்மனே தன்னை காக்கும் கதை: சுந்தர் சி பகிர்ந்த தகவல்

அம்மனே தன்னை காக்கும் கதை: சுந்தர் சி பகிர்ந்த தகவல்

வழக்கமாக அம்மன் தான் மக்களை காப்பாற்றுவார், ஆனால் இப்படத்தில் அம்மனே தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு சூழல் வருகிறது என மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முக்கிய கதைக்கள முடிச்சை இயக்குனர் சுந்தர் சி முன் வெளியீட்டு விழாவில் உடைத்துள்ளார். இந்த சுவாரசிய உரையை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுந்தர் சி பேசுகையில், தனது திரைப்பயணத்தில் மிக கடினமான சவால்களை சந்தித்த படம் இது என்றார். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக 800 கலைஞர்கள் உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். 400 விஎப்எக்ஸ் கலைஞர்கள் பணியாற்றியுள்ள இப்படத்தில் 3,000-க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் வெறும் 12 காட்சிகளில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு ஆகியோர் மிகச்சிறந்த உழைப்பை வழங்கியிருப்பதாக இயக்குனர் பாராட்டினார். பக்தி, த்ரில்லர், நகைச்சுவை மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த விருந்தாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வரும் நவம்பர் 6 அன்று தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்