திரையரங்குகளில் நாளை கர்ஜிக்க வரும் ‘சிக்மா’: லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

திரையரங்குகளில் நாளை கர்ஜிக்க வரும் ‘சிக்மா’: லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சிக்மா’ நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதனை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தீப்பொறி பறக்கும் புதிய பதிவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷனுடன் ஃபரியா அப்துல்லா, கேத்தரின் தெரசா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தனது சொந்த விதிகளின்படி களமிறங்கும் தனி ஓநாய் போன்ற கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன் மேற்பார்வையில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்திற்கு முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான திரை விருந்தாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Lyca Productions

பழைய செய்திகள்