குந்தன்பாக் பேய் பங்களா மர்மத்தை படமாக்கும் நடிகர் சந்தீப் கிஷன்: மிரட்டலான புதிய ஹாரர் படம்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டையின் குந்தன்பாக் பேய் பங்களா மர்மம் பல ஆண்டுகளாக மக்களிடையே பேசப்பட்டு வரும் ஒரு உண்மை சம்பவமாகும். இந்த மர்மமான பேய் பங்களா சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஹாரர் திரைப்படம் உருவாக உள்ளதாக நடிகர் சந்தீப் கிஷன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சினிமா வட்டாரத்தில் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். வெங்கடாத்ரி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சந்தீப் கிஷன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இயக்குநர் தேவா கட்டாவின் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீராம் எரகமரெட்டி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வெங்கடாத்ரி டாக்கீஸ் நிறுவனம் ஏற்கனவே ஏ1 எக்ஸ்பிரஸ் மற்றும் விவாஹ போஜனம்பு போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த ஹாரர் திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. நிஜ வாழ்க்கையின் மர்மத்தை திரையில் காண ரசிகர்கள் இப்போதே மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
· Ursvamsishekar