ஜேசன் சஞ்சய் கதையை மட்டுமே நம்பும் இயக்குநர்: சிக்மா படம் குறித்து சந்தீப் கிஷன் பாராட்டு
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை நடிகர் சந்தீப் கிஷன் பகிர்ந்துள்ளார். சினிமா இயக்கத்தை முறையாக வெளிநாட்டில் கற்றுக்கொண்டு திரைத்துறைக்கு வந்துள்ள ஜேசன் சஞ்சயின் கதை சொல்லும் விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய சந்தீப் கிஷன், கதையில் எந்தவிதமான தேவையற்ற வித்தைகளோ அல்லது செயற்கையான பில்ட்-அப் காட்சிகளோ இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை மட்டுமே மிக நேர்த்தியாகவும் அளவாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் என்றும், கதாபாத்திரங்களுக்கான மாஸ் தருணங்கள் கூட கதையோடு இயல்பாக இணைந்து வரும் என்றும் புகழ்ந்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' படம் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்குகிறார். அவரது இந்த நேர்மையான இயக்கப் பாணி சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
· @_movietamil