யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த சந்தீப் கிஷனின் 'ரேஜ் ஆஃப் சிக்மா' பாடல்!

யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த சந்தீப் கிஷனின் 'ரேஜ் ஆஃப் சிக்மா' பாடல்!

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அதிரடி திரைப்படமான 'சிக்மா' (SIGMA) படத்தில் இருந்து வெளியான மூன்றாவது சிங்கிள் 'ரேஜ் ஆஃப் சிக்மா' யூடியூபில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல் அனல் பறக்கும் மாஸ் பீட்களுடன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சுபாஸ்கரன் வழங்க, ஜி.கே.எம். தமிழ்குமரன் மேற்பார்வையில் பிரம்மாண்டமாக உருவாகிறது. தமனின் துள்ளலான ரிதம் இளைஞர்களை உடனே முணுமுணுக்க வைத்துள்ளதுடன், இன்ஸ்டாகிராமில் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் தயாராகியுள்ள சிக்மா திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது. விரைவில் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Lyca Productions

பழைய செய்திகள்