‘சிக்மா’ முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள்: உற்சாகத்தில் படக்குழுவினர்

‘சிக்மா’ முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள்: உற்சாகத்தில் படக்குழுவினர்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் கைதட்டி கொண்டாடுவதையும், படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் சிரித்து தங்களது வெற்றியைப் பகிர்ந்து கொள்வதையும் இந்த வீடியோ காட்சிப்படுத்துகிறது. சுபாஸ்கரன் தயாரிப்பில் தமன் இசையில் உருவான பாடல்களும் சண்டைக்காட்சிகளும் முதல் காட்சியிலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளன. ஃபரியா அப்துல்லா, சந்தீப் கிஷன் கூட்டணியின் நடிப்பு திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் நேர்மறையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்