புக்மைஷோவில் 8.2 ரேட்டிங் பெற்று அசத்தும் சிக்மா: வெற்றியை கொண்டாடும் லைகா நிறுவனம்!
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் பரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் திரைப்படமான சிக்மா திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், பிரபல முன்பதிவு தளமான புக்மைஷோவில் இப்படம் 8.2 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தமன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும், அதிரடி சண்டைக் காட்சிகளும் ஆக்ஷன் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை வழங்கி வருவதால் திரையரங்குகளில் கூட்டமும் அதிகரித்து வருகிறது. தரமான திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள சிக்மா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்ஷன் விரும்பிகளுக்கு இத்திரைப்படம் நல்ல தியேட்டர் அனுபவத்தை தந்து வருகிறது.
· Lyca Productions