புக்மைஷோவில் 8.2 ரேட்டிங்: சந்தீப் கிஷன் நடித்த 'சிக்மா' திரைப்படத்திற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு!

புக்மைஷோவில் 8.2 ரேட்டிங்: சந்தீப் கிஷன் நடித்த 'சிக்மா' திரைப்படத்திற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் வெளியாகியுள்ள அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'சிக்மா', புக்மைஷோ தளத்தில் 8.2 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்று அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தமனின் அதிரடியான பின்னணி இசையும், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளும் இப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான இந்த படம், விறுவிறுப்பான திரைக்கதையாலும் சண்டைக் காட்சிகளாலும் ஆக்‌ஷன் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குடும்ப ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் பேராதரவுடன் படத்தின் வசூலும் சாதகமாக உயர்ந்து வருவதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்