துள்ளலான கொண்டாட்டத்துடன் நடைபெற்ற 'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-லாஞ்ச் விழா!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' (SIGMA) திரைப்படத்தின் பிரம்மாண்ட ப்ரீ-லாஞ்ச் விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட இந்த விழாவின் சிறப்பு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. விழா மேடையில் இசையமைப்பாளர் தமன் எஸ் அவர்களின் துள்ளலான இசை நிகழ்ச்சியும், நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை ஃபரியா அப்துல்லா ஆகியோரின் நடனமும் அரங்கை அதிர வைத்தன. ரசிகர்களின் கரவொலி மற்றும் ஆரவாரத்துடன் இந்த இசை வெளியீட்டு நிகழ்வு கோலாகலமாக அமைந்தது. வண்ணமயமான விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் அரங்கம் முழுதும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், இந்த விழா படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆரவாரம் சென்னை முழுவதும் எதிரொலித்தது.
· Lyca Productions