திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சந்தீப் கிஷன் நடித்த சிக்மா
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் வெளியாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான சிக்மா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் அதிரடியான இசையமைத்துள்ளார். அனல் பறக்கும் ஆக்ஷன் சண்டைக் காட்சிகளுடன் நெஞ்சைத் தொடும் உணர்ச்சிப்பூர்வமான குடும்பத் தருணங்களும் நிறைந்த இத்திரைப்படத்திற்கு திரையரங்குகளில் இளம் ரசிகர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. கதாநாயகன் சந்தீப் கிஷனின் தீப்பொறி பறக்கும் நடிப்பும் திரையில் வெளிப்படும் வேகமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தமனின் அதிரடியான பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகள் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ள நிலையில், வரும் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கு உரிமையாளர்களும் இப்படத்திற்கு தொடர்ந்து காட்சிகளை ஒதுக்கி வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
· Actor Kayal Devaraj