நேர்மறையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் களைகட்டும் சந்தீப் கிஷனின் ‘சிக்மா’
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வருகிறது. கேயல் தேவராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். சுபாஸ்கரன் மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் தயாரிப்பில் உருவான இந்த ஆக்ஷன் திரைப்படத்திற்கு தமன் அதிரடியான இசையமைத்துள்ளார். சந்தீப் கிஷனின் மாஸ் எனர்ஜி, ஃபரியா அப்துல்லாவின் திரை இருப்பு மற்றும் நேர்த்தியான ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வரும் இந்த ஆக்ஷன் எண்டர்டெய்னர், வார இறுதி நாட்களிலும் கூடுதல் காட்சிகளுடன் திரையிடப்பட்டு வருகிறது.
· Actor Kayal Devaraj