சந்தீப் கிஷனின் ‘சிக்மா’: எமோஷன் மற்றும் ஆக்ஷன் கலவையில் திரையரங்க வெற்றி

சந்தீப் கிஷனின் ‘சிக்மா’: எமோஷன் மற்றும் ஆக்ஷன் கலவையில் திரையரங்க வெற்றி

நடிகர் சந்தீப் கிஷன் அதிரடி நாயகனாக நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எமோஷன் மற்றும் ஆக்ஷன் கலந்த கமர்சியல் விருந்தாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். கதையின் விறுவிறுப்பும் தாய் உணர்வு மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளும் திரையரங்குகளில் கைதட்டல்களைப் பெற்று வருகின்றன. ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் நிறைந்திருப்பதால், வார இறுதி நாட்களிலும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்