லைகா தயாரிப்பில் 'சிக்மா': ஆட்டம் போட வைக்கும் 'சுலோச்சனா' வீடியோ பாடல் வெளியீடு!
சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'சிக்மா' திரைப்படத்திலிருந்து, துள்ளலான நடன அசைவுகள் நிறைந்த 'சுலோச்சனா' முழு வீடியோ பாடல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இசையமைப்பாளர் தமனின் உற்சாகமான துள்ளல் இசையில் உருவான இப்பாடலில், ஃபரியா அப்துல்லா மற்றும் சந்தீப் கிஷனின் நடனக் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களைக் கவர்ந்து விசில் அடிக்க வைத்தன. சரிகம சவுத் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் சிக்மா திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்த வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளதால், பாடல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
· Only Kollywood