'சிக்மா' தமிழ் ஆடியோ ஆல்பம் வெளியானது: தமனின் அதிரடி இசையில் முழு பாடல்களும் ஸ்ட்ரீமிங்

'சிக்மா' தமிழ் ஆடியோ ஆல்பம் வெளியானது: தமனின் அதிரடி இசையில் முழு பாடல்களும் ஸ்ட்ரீமிங்

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா இணைந்து நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தின் தமிழ் முழு ஆடியோ ஆல்பம் அனைத்து முன்னணி மியூசிக் தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையில் வெளிவந்துள்ள இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள மெலடி மற்றும் அதிரடிப் பாடல்கள் வெளியானது முதலே இசை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சந்தீப் கிஷனின் துடிப்பான நடனக் காட்சிகளுடன் இப்பாடல்கள் வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு உற்சாகமான கொண்டாட்ட அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழலில், முழு ஆல்பத்தின் வெளியீடு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

· Lyca Productions

பழைய செய்திகள்