50 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் சுந்தீப் கிஷனின் 'சிக்மா' டிரெய்லர்!

50 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் சுந்தீப் கிஷனின் 'சிக்மா' டிரெய்லர்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுந்தீப் கிஷன் அதிரடி நாயகனாக நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர், யூடியூப் தளத்தில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜே.எஸ்.ஜே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தமன் இசையமைத்துள்ள அதிரடி பின்னணி இசை டிரெய்லரின் விறுவிறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. சுபாஸ்கரன் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு 'சிக்மா' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் காணும் சுந்தீப் கிஷனின் ஆக்‌ஷன் அவதாரம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

· Lyca Productions

பழைய செய்திகள்