விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான சுந்தீப் கிஷனின் 'சிக்மா' தமிழ் டிரெய்லர்!

விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான சுந்தீப் கிஷனின் 'சிக்மா' தமிழ் டிரெய்லர்!

சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரில்லர் திரைப்படமான 'சிக்மா' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டிரெய்லரை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான துப்பறியும் காட்சிகள் மற்றும் வேகமான சண்டை வடிவமைப்புடன் இந்த டிரெய்லர் அமைந்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜே.எஸ்.ஜே இயக்கம் செய்துள்ளார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமனின் அனல் பறக்கும் பின்னணி இசை காட்சிகளின் வேகத்தை மேலும் கூட்டியுள்ளது. ராயன் படத்திற்குப் பிறகு சுந்தீப் கிஷன் தமிழில் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படம் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி விடுமுறையைக் குறிவைத்து உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது. திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தைத் தரும் வகையில் இப்படம் தயாராகியுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Lyca Productions

பழைய செய்திகள்