அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் களமிறங்கும் 'சிக்மா': அதிரடி அப்டேட்
சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்பத்தோடு கண்டுகளிக்கத் தகுந்த பிரம்மாண்டப் படைப்பாக இப்படம் திரைக்கு வருகிறது என்று சினிமா வட்டாரத்தில் கயல் தேவராஜ் தகவல் பகிர்ந்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கேத்தரின் தெரசா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் இப்படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த கொண்டாட்ட அனுபவமாக 'சிக்மா' இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
· Actor Kayal Devaraj