சிக்மா டிரெய்லருக்கு மாபெரும் வரவேற்பு: 1 கோடி பார்வைகளைக் கடந்து இணையத்தில் சாதனை

சிக்மா டிரெய்லருக்கு மாபெரும் வரவேற்பு: 1 கோடி பார்வைகளைக் கடந்து இணையத்தில் சாதனை

சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் சாதனை படைத்துள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் உற்சாகமாக அறிவித்துள்ளது. சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன் மேற்பார்வையில் உருவாகியுள்ள இந்த அதிரடித் திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடனும் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளுடனும் வெளியான இதன் டிரெய்லர், சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை எகிற வைத்துள்ளது. சந்தீப் கிஷனின் அசுரத்தனமான திரை ஆளுமையும், தமனின் மிரட்டலான பின்னணி இசையும் இந்த டிரெய்லருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 அன்று 'சிக்மா' திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தியேட்டர்களில் ரசிகர்களுக்கு ஒரு தரமான ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது என படக்குழுவினர் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Lyca Productions

பழைய செய்திகள்