சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி வட அமெரிக்க உரிமை விற்பனை: பிரத்யங்கிரா சினிமாஸ் கைவசம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் வட அமெரிக்க விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான பிரத்யங்கிரா சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் தளத்தில் இந்த முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் கூலி திரைப்படம் ஐமேக்ஸ், டி-பாக்ஸ் மற்றும் 4டி-எக்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப திரைகளில் திரையிடப்பட உள்ளது. நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் கூலி திரைப்படம், வட அமெரிக்காவின் மிகப்பெரிய அளவிலான திரையரங்குகளில் ரசிகர்களுக்கு சிறப்பான திரை அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Hamsinient