சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ரஜினியின் கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் கண்ணாடி அணிந்து, கைகளைக் கட்டியபடி ரஜினிகாந்த் நிற்கும் அந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீவிரமான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். முன்னணி தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்தின் அதிரடியான கம்பேக் படமாக இது அமையும் என்று கோலிவுட் வட்டாரங்களில் உற்சாகமான பேச்சு எழுந்துள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்