ஜெயிலர் 2 படத்தில் திலீப் கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

ஜெயிலர் 2 படத்தில் திலீப் கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல மலையாள முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு திலீப் என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் மிகச்சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது வென்ற சுராஜ் வெஞ்சாரமூடு, நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி மற்றும் ஆக்‌ஷன் பாணியில் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் இணைய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தில் விநாயகம் கதாபாத்திரத்தில் விநாயகன் மிரட்டியது போல, இரண்டாம் பாகத்திலும் மலையாளத்தில் இருந்து வந்துள்ள சுராஜ் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் மிரட்டுவார் என கோலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் அதிரடி இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

· Anirudhofficial

பழைய செய்திகள்