சீயான் விக்ரமின் ‘சீயான் 62’: தேசிய விருது நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அதிகாரப்பூர்வமாக இணைந்தார்!
சீயான் விக்ரம் நடிக்கும் 'சீயான் 62' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் புகழ் சுராஜ் வெஞ்சாரமூடு இப்படத்தின் மூலம் முதன்முறையாக நேரடித் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது சுராஜ் வெஞ்சாரமூடும் இணைந்திருப்பது படத்தின் நடிப்புத் தளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் தலைசிறந்த நடிகர்கள் ஒரே திரையில் மோதிக்கொள்ளும் தீவிரமான காட்சிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Shibuthameens