சியான் 62 படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

சியான் 62 படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

மலையாள திரையுலகின் தேசிய விருது பெற்ற தலைசிறந்த நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு, சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'சியான் 62' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'டிரைவிங் லைசென்ஸ்', 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' போன்ற பல படங்களில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்த சுராஜ் வெஞ்சாரமூடு, இப்படத்தில் விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து களம் காண்கிறார். இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சிறந்த நடிப்புத் திறமை கொண்ட கலைஞர்கள் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

· Riyashibu_

பழைய செய்திகள்