'மூன்று மந்திரவாதிகள் இணையும் மேஜிக்': 'ஜெயிலர் 2' திலீப் கதாபாத்திரம் குறித்து சுராஜ் வெஞ்சாரமூடு பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் 'திலீப்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தனது கதாபாத்திர அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். தோற்றம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் தான் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய பாணியில் இக்கதாபாத்திரம் அமைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது போன்ற ஒரு பிரம்மாண்ட திரை உலகில் நடிப்பது தனக்கு இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராக்ஸ்டார் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகிய மூன்று மேஜிக் மனிதர்களும் ஒன்று சேரும் போது உருவாகும் திரை மாயாஜாலத்தை ரசிகர்கள் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டும் என்று அவர் உற்சாகமாக அழைப்பு விடுத்துள்ளார். மலையாள சினிமாவில் தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடுவின் வரவு ஜெயிலர் 2 படத்தின் கதைக்களத்திற்கு கூடுதல் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

· @_movietamil

பழைய செய்திகள்