உலக அளவில் 205 கோடி ரூபாய் வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பும் சூர்யாவின் 'சீன்'!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சீன்' (SCENE) திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் 205 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த பிரம்மாண்டமான வசூல் விவரத்தை மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆவேசம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள படம் என்பதால் ஆரம்பம் முதலே இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. திரையரங்குகளில் வெளியான நாள் முதல் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சுஷின் ஷியாமின் மிரட்டலான இசையும், நஸ்ரியா மற்றும் நஸ்லனின் அட்டகாசமான நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பாக்ஸ் ஆபிசில் இந்த வசூல் வேட்டை மேலும் பல புதிய உச்சங்களைத் தொடும் என சினிமா விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.
· Idiamondbabu