தீபாவளிக்கு அதிரடி காட்ட வரும் சூர்யாவின் 'SCENE': இன்னும் 8 நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ்

தீபாவளிக்கு அதிரடி காட்ட வரும் சூர்யாவின் 'SCENE': இன்னும் 8 நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ்

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள 'SCENE' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் வெளியிட்டுள்ள அதிரடி கவுண்டவுன் போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 'ரோமாஞ்சம்' மற்றும் 'ஆவேஷம்' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லென் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக கோகுலம் மூவிஸ் மற்றும் சக்தி பிலிம் பேக்டரி மூலம் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு துள்ளலான கொண்டாட்ட விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

· Sony Music South

பழைய செய்திகள்