ஜோதிகா, நஸ்ரியா இணையும் 'சீன்': தீபாவளி ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

ஜோதிகா, நஸ்ரியா இணையும் 'சீன்': தீபாவளி ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். "கொலை, மர்மம், கலகலப்பு கலந்த ஒரு வெறித்தனமான அனுபவம் காத்திருக்கிறது; திரையரங்குகளில் குடும்பத்தோடு கண்டு மகிழுங்கள்" என்று உற்சாகத்தோடு குறிப்பிட்டு, படத்தின் புதிய முன்னோட்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜோதிகா, நஸ்ரியா ஃபஹத் மற்றும் நஸ்லென் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளைஞர்களைக் கவரும் சுஷின் ஷியாமின் இசை, சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் வெளியீடு என பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் உருவாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கவனம் ஈர்த்த நஸ்ரியா மற்றும் நஸ்லென் கூட்டணி தமிழில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6, 2026 அன்று 'சீன்' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பண்டிகை விடுமுறையைக் குறிவைத்து களம் இறங்கும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சூர்யா அறிவித்திருப்பது, பண்டிகை சினிமா கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

· Suriya_offl

பழைய செய்திகள்