திரையரங்கில் விசிலடித்து ரசித்த சூர்யா: மண்டாடி படக்குழுவிற்கு நெகிழ்ச்சியான வாழ்த்துக் கடிதம்

திரையரங்கில் விசிலடித்து ரசித்த சூர்யா: மண்டாடி படக்குழுவிற்கு நெகிழ்ச்சியான வாழ்த்துக் கடிதம்

நடிகர் சூரி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மண்டாடி திரைப்படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். இப்படத்தை அதன் 23வது நாளில் பொது மக்களுடன் அமர்ந்து விசில் சத்தங்களுக்கிடையே கண்டு ரசித்ததாகக் குறிப்பிட்டுள்ள சூர்யா, படத்தின் எழுத்து மற்றும் தயாரிப்பு துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இத்தகைய நல்ல கதையை நம்பி களம் இறங்கிய தயாரிப்பாளரின் அர்ப்பணிப்பையும், அதனை அருமையான பொழுதுபோக்கு திரைப்படமாக மாற்றிய இயக்குனரின் உழைப்பையும் அவர் மனதார வாழ்த்தியுள்ளார். சூர்யாவின் இந்த பாராட்டு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் சூரி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவுடன் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்