சூர்யாவின் 'சீன்' படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை: திரையரங்குகளில் அதிரடி வரவேற்பு!

சூர்யாவின் 'சீன்' படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை: திரையரங்குகளில் அதிரடி வரவேற்பு!

இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. வித்தியாசமான க்ரைம் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. ரோமாஞ்சம், ஆவேஷம் போன்ற வெற்றிப் படங்களை தந்த ஜித்து மாதவன், தனது தனித்துவமான நகைச்சுவை பாணியை இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய சுவாரசியமான காட்சிகளில் சூர்யாவின் துடிப்பான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்', வசூலிலும் சிறப்பான நிலையை எட்டியுள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்