சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, நஸ்ரியா நடிக்கும் 'சீன்': வளைகுடா நாடுகளில் பார்ஸ் ஃபிலிம்ஸ் பிரம்மாண்ட ரிலீஸ்!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, நஸ்ரியா நடிக்கும் 'சீன்': வளைகுடா நாடுகளில் பார்ஸ் ஃபிலிம்ஸ் பிரம்மாண்ட ரிலீஸ்!

ரோமஞ்சம் மற்றும் ஆவேசம் படங்களின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சீன்' (SCENE). நடிகர் சூர்யா வழங்கும் இப்படத்தின் வளைகுடா நாடுகளுக்கான (GCC) திரையரங்க வெளியீட்டு உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான பார்ஸ் ஃபிலிம்ஸ் (Phars Film) கைப்பற்றியுள்ளதாக பிஆர்ஓ சதீஷ் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஜோதிகா, நஸ்ரியா நசீம், நஸ்லென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு திரையுலக ரசிகர்களின் பெரும் அபிமானத்தைப் பெற்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால், வளைகுடா நாடுகளில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற 'ஆத்தி இவ யாரா' பாடல் இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து அதிரடி ஹிட் அடித்துள்ளது. அந்த உற்சாகத்துடன் தற்போது வளைகுடா நாடுகளிலும் பிரம்மாண்ட வெளியீட்டிற்குப் படக்குழு தயாராகி வருவது வெளிநாட்டுத் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

· Prosathish

பழைய செய்திகள்