“நாளை முதல் கங்குவா உங்களுடையது”: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் உற்சாக அழைப்பு!

“நாளை முதல் கங்குவா உங்களுடையது”: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் உற்சாக அழைப்பு!

நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படமான ‘கங்குவா’ வெளியீட்டை முன்னிட்டு, “நாளை முதல் கங்குவா உங்களுடையது” என சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா பல்வேறு அதிரடி தோற்றங்களில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான பாடல்களும் காட்சிகளும் உலகெங்கும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பல மொழிகளில் உலகளவில் வெளியாகிறது. நீண்ட மாத உழைப்பிற்குப் பிறகு கங்குவா திரைப்படம் திரைக்கு வருவதால், ரசிகர்கள் முதல் நாள் காட்சிகளைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். சூர்யாவின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

· Suriya_offl

பழைய செய்திகள்