சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ': மே 1 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரொமான்டிக் ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு மே 1 அன்று படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.
· Suriya_offl