கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா: அமெரிக்காவில் மே 1 முதல் ரெட்ரோ வெளியீடு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா: அமெரிக்காவில் மே 1 முதல் ரெட்ரோ வெளியீடு

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1 முதல் அமெரிக்க திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ரிலீஸாக உள்ளதாகவும், இதற்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்காவில் தொடங்கியுள்ளதாகவும் பிரைம் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் காதல், நகைச்சுவை, போர் ஆகிய உணர்வுகளை பின்னணியாக கொண்ட ஒரு விண்டேஜ் ஆக்ஷன் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் இந்த கூட்டணி ஒரு புதிய ஆக்ஷன் அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே தின வெளியீடாக அமெரிக்கா முழுவதும் விரிவான திரைகளில் வெளியாகும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

· Primemediaus

பழைய செய்திகள்