சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்: நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் 'கருப்பு' டீசர்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் அதிரடி டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று பிஆர்ஓ சதீஷ் மற்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அருண் வெஞ்சாரமூடு, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சாய்பியங்கர் இப்படத்திற்கு இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்கள் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா இணையும் முதல் படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே வானளவு உயர்ந்துள்ளது. நாளை காலை வெளியாகவுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் டீசர் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்ட விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
· Prosathish