"இது எனது 48வது படம், ஆனால் பயணம் இன்னமும் புதுமையாக உள்ளது": 'சீன்' படம் குறித்து மனம் திறந்த சூர்யா!
துபாயில் நடைபெற்ற 'சீன்' திரைப்படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, தனது திரையுலகப் பயணம் மற்றும் இப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கேரளாவிலிருந்து ஒரு குழு தமிழ்நாட்டிற்கு வந்து படம் எடுப்பது தனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் 28 ஆண்டுகளைக் கடந்துள்ள தனது 48வது திரைப்படமாக 'சீன்' உருவாகியிருந்தாலும், தனது சினிமா பயணம் இன்னமும் புத்தம்புதியதாகவே உணர்வதாக சூர்யா பகிர்ந்தார். ரசிகர்கள் எளிதில் ஊகிக்க முடியாத புதிய அனுபவங்களை தனது படங்கள் தர வேண்டும் என்பதில் தான் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 'சீன்' திரைப்படத்தை ஒரு க்ரைம் த்ரில்லர் என்று கூறினாலும், இயக்குநர் ஜித்து மாதவனின் இயல்பான நகைச்சுவை இழையோடும் ஒரு குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் என்றும், இப்படத்தில் நடித்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் சூர்யா உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
· @_movietamil