டோரதி திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய சூர்யா: கார்த்திக் சுப்பராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தைப் பார்த்து வியந்த நடிகர் சூர்யா, படக்குழுவினருக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் பலரும் பேசத் தயங்கும் ஒரு முக்கியப் பொருளை இப்படம் துணிச்சலாகப் பேசியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சூர்யா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொல்ல வேண்டிய அழுத்தமான கருத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திறம்படப் பதிவு செய்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரின் இயல்பான நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துள்ளதாகவும், இசைஞானி இளையராஜாவின் இசை மனதை உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் உருவாகி வரும் சூழலில், இயக்குநரின் இந்த சமூக அக்கறை நிறைந்த படைப்பை சூர்யா மனம் திறந்து பாராட்டியிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

· Suriya_offl

பழைய செய்திகள்