வெளிநாடுகளில் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்த சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்

வெளிநாடுகளில் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்த சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் வெளிநாடுகளில் 1200-க்கும் மேற்பட்ட திரைகளில் வெற்றிகரமாக ஓடி, 1 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் கடந்துள்ளதாக விநியோகஸ்தரான ஏபி இன்டர்நேஷனல் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் பலமாக அமைந்துள்ளன. சூர்யாவின் மாஸான நடிப்புக்கும் கார்த்திக் சுப்பராஜின் இயக்க பாணிக்கும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பங்களை ஈர்க்கும் காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வார இறுதி நாட்களில் குடும்பங்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. வசூல் ரீதியாக ரெட்ரோ திரைப்படம் அடுத்தடுத்த புதிய இலக்குகளை நோக்கி முன்னேறி வருகிறது. வெளிநாட்டுத் திரையரங்குகளில் இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

· Apifilms

பழைய செய்திகள்