சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்திலிருந்து கண்ணாடி பூவே பாடல் பிப்ரவரி 13 அன்று வெளியாகிறது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'கண்ணாடி பூவே' பாடல் காதலர் தினப் பரிசாக பிப்ரவரி 13 அன்று வெளியாகும் என்று தயாரிப்புத் தரப்பு மற்றும் ஏபி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடல் ஆத்மார்த்தமான காதல் மெலடியாக உருவாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பும், விண்டேஜ் ரெட்ரோ பின்னணியும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மே 1 தொழிலாளர் தினத்தன்று திரையரங்குகளில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில், முதல் பாடல் வெளியீடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் இசை குறித்த அடுத்தடுத்த சுவாரசிய அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளன.
· Apifilms