சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் 2 மில்லியன் டாலர் கிளப்பில் நுழைந்த சூர்யாவின் 'ரெட்ரோ'!

சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் 2 மில்லியன் டாலர் கிளப்பில் நுழைந்த சூர்யாவின் 'ரெட்ரோ'!

நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் 'ரெட்ரோ' திரைப்படம், சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 16 கோடி ரூபாய்) வசூலைக் கடந்து புதிய சாதனையை எட்டியுள்ளது. வெளிநாட்டு ரசிகர்களின் பேராதரவை உறுதிப்படுத்தும் வகையில் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் அதிரடியான ரெட்ரோ இசை மற்றும் கார்த்திக் சுப்பராஜின் வண்ணமயமான கேங்ஸ்டர் ஆக்‌ஷன் பாணி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டுச் சந்தைகளில் சூர்யாவின் படத்திற்குக் கிடைத்துள்ள இந்த பிரம்மாண்ட வசூல், படத்தின் வெற்றியை மேலும் உறுதி செய்துள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் வரும் வாரங்களிலும் வசூல் வேட்டையைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்