நாளை நடக்கிறது சூர்யாவின் 'சீன்' ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

நாளை நடக்கிறது சூர்யாவின் 'சீன்' ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்செய்தி தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை இப்போதே தொடங்கி வைத்துள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை டிரெய்லர் வெளியாகும் தருணத்தை சூர்யா ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட சமூக வலைத்தளங்களில் தயாராகி வருகின்றனர். படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ்நாட்டில் சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியிடுகிறது. திரையரங்குகளில் முன்பதிவுகள் நாளை முதல் படிப்படியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Prosathish

பழைய செய்திகள்