புக்மைஷோவில் சூர்யாவின் வேட்டை: ஒரே மணி நேரத்தில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளைக் கடந்த சீன்!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றி நடைபோட்டு வரும் சூர்யாவின் சீன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. முன்னணி டிக்கெட் தளமான புக்மைஷோவில் கடந்த ஒரே மணி நேரத்தில் மட்டும் சுமார் 30,700 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் பதிவாகி சாதனை படைத்துள்ளது. தியேட்டர்களில் சூர்யா ரசிகர்களின் கொண்டாட்டமும் பொதுமக்களின் நேர்மறையான விமர்சனங்களும் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக முக்கிய நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அடுத்தடுத்த காட்சிகளுக்கு முன்பதிவு வேகம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் திரைப்பயணத்தில் பாக்ஸ் ஆபீஸில் தொடர் வசூல் சாதனை படைக்கும் வெற்றிகளில் ஒன்றாக இப்படம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா மற்றும் சர்வதேச அளவிலும் இப்படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
· Ursvamsishekar